Thursday, October 17, 2013

வாழ்க்கை

இன்று தொடங்கி நாளை முடிவதாய்
வாழ்க்கை மிக சிறியது தான்!
இடையில் காதலும் வலிகளும் சேர்கையில்
சில கணங்கள் யுகங்களாகி விடுகின்றன... 

Tuesday, February 14, 2012

சுகம்


வானுக்கு நிலவு சுகம்!
கடலுக்கு அலை சுகம்!
மலருக்கு மனம் சுகம்!
பருவத்திருக்கு வசந்தம் சுகம்!
எனக்கு சுகம்  உன்னை
தொட்டு வந்த தென்றல் மட்டுமே…

Thursday, January 19, 2012

தென்றல் - சருகு

தென்றலாக நீ 
வந்தாய்!
மலராக நான்
மலர்ந்தேன்! 
புயலாக நீ 
மாறினாய்! 
சருகாக நான் 
உதிர்ந்து விட்டேன்!

இதயச்சிறை


கண்ணா 
உன்னிடம்  யாசிப்பதெல்லாம்
ஒன்றேயொன்று  தான்!
உன்  இதயச்சிறையில்
ஓரிடம்  மட்டும்  தான்…
உன்  இதய  பாதுகாப்பில் 
என்  ஆயுட்காலம் அனைத்தும்
உன்  ஆயுட்கைதியாக…
இடம்  கொடுப்பாயா…?
இதயச்சிறை

மை டாகுமென்ட்ஸ்

என்  மை டாகுமெண்ட்சில் தான் 
நீ  உள்ளாய்
உன்  ரீசைக்கிள் பின்னில்  கூட 
நான்  இல்லை…
 

Tuesday, December 27, 2011

மொழிப்பெயர்ப்பு

நீயென் மௌனத்தை
மொழிப்பெயர்த்து 
என் மொழியை
ஊமையாக்கியவன்



Wednesday, October 26, 2011

மீண்டும் நான்

உன்னிடம் என் காதலைப் பகிர்ந்த நிமிடம் 
தெய்வங்கள் ஓய்வில் இருந்த நிமிடம் 
பூக்கள் கூட வெறும் மொட்டுகளாய் 
கடல் அலைகள் அமாவாசை ஆர்பரிப்பில் 
மணல் வெளி கண்காணிப்பில் நீயும் கூட 
உன் செவிகளை வேறு திசைகளில் வைத்து 
தேர்ந்த்தெடுத்த வார்த்தைகளால் என் 
காதலைச் சொன்ன நிமிடம் - என் 
மனச் சுமைக் கூடிப் போனது -  உன் 
அர்த்தம் புரியாத மௌனத்தால் 
கவிதையின் ஆரம்ப வரிகளில் மீண்டும் நான்...